Friday, May 18, 2018

நம்பிக்கை வாக்கெடுப்பு..! பெங்களூரு திரும்பிய காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்

கர்நாடகா சட்டப் பேரவையில் இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதால், ஹைதராபாத் சென்றிருந்த காங்கிரஸ், ம.ஜ.த எம்.எல்.ஏ-க்கள் பெங்களூருவுக்குத் திரும்பினர். 
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிக எம்.எல்.ஏ-க்களைப் பெற்றிருந்த பா.ஜ.கவைச் சேர்ந்த எடியூரப்பாவை முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைப்புவிடுத்தார். அதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இன்று மாலையில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதற்கு, முன்னதாக காங்கிரஸ், ம.ஜ.த எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பேருந்து மூலம் பெங்களூருவுக்குச் சென்று சேர்ந்தனர். அவர்கள், தற்போது ஹோட்டல் ஹில்டானில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு முழுவதும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

நம்பிக்கை வாக்கெடுப்பு..! பெங்களூரு திரும்பிய காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்

கர்நாடகா சட்டப் பேரவையில் இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதால், ஹைதராபாத் சென்றிருந்த காங்கிரஸ், ம.ஜ.த எம்.எல்.ஏ-க்கள் பெங்க...